University Anthem Tamil Text


புதுவைப் பல்கலைக்கழகப் பண்

தமசோமா ஜோதிர்கமய
தமசோமா ஜோதிர்கமய
 
ஒளிபரவ, ஒளிபரவ

புதுவை புதுவை புதுவையே போற்றுவோம்
புதுவை பல்கலைக் கழகமே உனை
வாழ்த்துவோம்

வங்கக் கடலலை தாலாட்டும்
ஞானச் சூரியன் உதிக்குமிடம்
இது எங்கள் புதுநெறி காட்டும் உலகம்
எந்நாளும் அறிவுத் தேடல் தொடரும்
அறிவூற்றைப்  பொழியும் ஆசிரியர்  - அதில்
தினமும் நனையும் மாணவர்கள்
இதிலன்றோ புதுவைப் பல்கலைக் கழகம்

அறிவின் தாகம் தணியும் சோலை
அகிலம் போற்றும் கல்விச் சாலை
மனித வளமே என்றும் உயர
புனித சேவை தொடருதே

பாரதித் தமிழால் நனைத்த இடம் - எங்கள்
பாரதிதாசன் விளைந்த நிலம்
அரவிந்தர் ஆசிகள் பெற்றதுடன்
அகில உலகிற்கு ஒளிர்விடும் இனிய தளம்
அறிவிச் சுடரொளி நெஞ்சில் எழ
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மாண்பினை உரைக்கும் மக்கள் அரங்கம்

ஆ அ ஆ அ ஆ........(2)
இதிலன்றோ புதுவைப் பல்கலைக் கழகம்

அறிவின் தாகம் தணியும் சோலை
அகிலம் போற்றும் கல்விச் சாலை
மனித வளமே என்றும் உயர
புனித சேவை தொடருதே

பல்கலைக் கழகம் என்றும் வளர்ந்திட
நாமும் வழிபடுவோம் - கல்விச்
சேவைகள் யாவும் காலமும்
தொடர்ந்திட நாளும் வேண்டுவோம்

புதுவையே  புதுமையே போற்றிடும்  பல்கலைக்  கழகமே
என்றும் வாழ்கவே !  வாழ்கவே !  வாழ்கவே !  வாழ்கவே !

புதுவை புதுவை புதுவையே போற்றுவோம்
புதுவை பல்கலைக் கழகமே உனை வாழ்த்துவோம்  (2)

 

Concept & Composition : Prof. J. A. K.  Tareen, (Ex-Vice-Chancellor)

Translation : Dr. Sujatha Vijayaraghavan

Tamil Verse by

1. Shri. Palani Bharathi, Chennai

2. Prof. A. Balasubramanian, Director,EMMRC, University of Mysore

3. Prof. K. A . Gunasekaran, Director, IITS, Chennai